Rock Fort Times
Online News

புதுக்கோட்டை டிஎஸ்பி பரத் சீனிவாசனுக்கு மத்திய அரசு விருது…!

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் சீனிவாசன். இவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றியவர். இவரது சிறப்பான சேவையை பாராட்டி மத்திய அரசு “உத்கிரிஷ்ட் சேவா பதக்கம்” வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு விருதுக்கு தேர்வாகியுள்ள டிஎஸ்பி பரத் சீனிவாசனுக்கு சக போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்