திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் பெயர் பட்டியல் வெளியீடு: திருத்தம் செய்ய வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம்…!
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை கடை விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசர அவசியம் கருதி, சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 5231 வியாபாரிகள் கண்டறியப்பட்டனர். ஆனால், அதில் சில வியாபாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், அவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் சாலையோர வியாபாரிகளின் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து கூடுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுபட்ட 989 சாலையோர வியாபாரிகள் கண்டறியப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 6220 சாலையோர வியாபாரிகளின் பெயர் பட்டியல் மாநகராட்சியின் அனைத்து வார்டுகுழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வியாபாரிகள் பார்வையிட்டு ஏதேனும் திருத்தம், அல்லது நீக்கம் செய்ய விரும்பினால் 30.11.2024 முதல் 16.12.2024 ஆம் தேதி வரை அந்தந்த வார்டுகுழு அலுவலக உதவி ஆணையரிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்ளுடன் விண்ணப்பிக்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.