மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம்- * இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் பங்கேற்பு
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயலும் மற்றும் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயலும் மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தஞ்சை ரோடு பால்பண்ணை பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட கழக செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமைக் கழக பேச்சாளர் கவிச்சுடர் கவிதைபித்தன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி கழகச் செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார், கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், ஆர்.ஜி.பாபு, பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே கார்த்திக், கவுன்சிலர் சாதிக்பாட்ஷா, மேலகல்கண்டார் கோட்டை செந்தில் சுருளிராஜன் மற்றும் மாவட்ட , மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், வட்ட, வார்டு, கிளைகழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.