Rock Fort Times
Online News

சரக்கு போதையில் சைக்கோத்தனம் ! திருச்சியில் 5 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை..- போக்சோ சட்டத்தில் கைதான சுவை ஹோட்டல் உரிமையாளர்!

திருச்சி அருகேயுள்ள நாகமங்கலத்தை சேர்ந்தவர் நவீனா. 28 வயதாகும் இவருக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர், நவீனா கர்ப்பமாக இருந்தபோதே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். நவீனாவும் அவரது குழந்தையும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், திருச்சி கே.கே நகர் வயர்லெஸ் ரோட்டில் உள்ள சுவை ஹோட்டலில் நவீனா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுஹோட்டல் உரிமையாளரான, திருச்சி ஏர்போர்ட் வசந்த நகரை சேர்ந்த நாசர் அலி என்பவருக்கும், நவீனாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் நாசர் அலி நவீனா வீட்டிற்கு சென்று இரவு தங்கியிருக்கிறார்.காலையில் நாசர் அலியின் நண்பனான நாகமங்கலம் செவன்பட்டியை சேர்ந்த வேலுமணி என்பவருடன் சேர்ந்து நவீனாவின் மகனை, காரில் நாகமங்கலம் அருகேயுள்ள சூரக்குடிப்பட்டிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தியதோடு 5 வயது குழந்தையையும் மது குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.பின்னர் சரக்கு போதையில் சிறுவனை அடித்ததோடு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் குழந்நையின் அலறல் சத்தம் கேட்ட உள்ளூர் மக்கள் யாரோ குழந்தையை கடத்தி வந்துள்ளார்கள் என நினைத்து அவர்களை பிடித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்த போலீஸார்,5 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாசர் அலி மற்றும் வேலுமணி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜல்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்