Rock Fort Times
Online News

பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ‘சஸ்பெண்ட்’…!

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர்களில், சந்திரசேகர ராவும் ஒருவர். 2001ல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய அவர், தெலுங்கானா உருவானதும், முதல்வராக 2014ல் பதவியேற்று, 2023 வரை பதவியில் நீடித்தார். தேசிய அரசியல் ஆசை ஏற்பட கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார். மாநிலத்தில் ஆட்சி பறிபோன பிறகு கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவ் – அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. மேலும் சகோதரர் ராமாராவுடனும் மோதல் உருவானது. இச்சூழ்நிலையில், கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேச துவங்கினார். கட்சியின் தலைவர்கள், ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகரராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ் ராவ் தான் காரணம் என்றார். இந்நிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்