வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18-ந் தேதி ஆர்ப்பாட்டம்…- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி !
வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில்:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரிய மசோதா தொடர்பாக தொடர்ந்த அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது. வக்பு சட்டத்தை ஒத்தி வைக்கவோ, தடை விதிக்கவோ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஏப்ரல் 18 – ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. உச்சநீதிமன்றம் சாதகமாக பதில் கொடுக்குமானால் போராட்டங்கள் தவிர்க்கப்படும் என அவர் கூறினார். கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி எம்.பி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.