Rock Fort Times
Online News

தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கு:- திருச்சியில் மேலும் இரண்டு பேர் கைது! பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் எல்பின் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும், நிலம் தருவோம் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை கூறி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று ஏமாற்றினர். இதுகுறித்து இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த புகார்களின் அடிப்படையில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா என்கிற அழகர்சாமியை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது
செய்தனர். இந்தநிலையில் இந்த நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட சாகுல்ஹமீது, பாபு ஆகிய இரண்டு பேரை திருச்சியில் உள்ள
ஹோட்டலில் வைத்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகந்தி, உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கைது செய்தனர்.
               ADVERTISEMENT…👇

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்