திருச்சியில் இயக்கப்படும் தனியார் பேருந்து முகப்பு பகுதியில் தவெக மாநாடு விளம்பரம்: பயணிகள் அதிர்ச்சி…!(வீடியோ இணைப்பு)
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நாளை(27-10-2024) நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறும் மாநாட்டிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் வருவார்கள் என கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் வித்தியாசமான முறையில் தனியார் பேருந்தில் விளம்பரம் செய்துள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், பிஎச்இஎல் வரை செல்லும் தனியார் மாநகர பேருந்தின் முன் பகுதியில் டிஜிட்டல் முறையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றாலும் பேருந்து எங்கு செல்கிறது என்று எழுதப்படும் இடத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.