பாரத பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11-ம் தேதி திருச்சி வருகை:* ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் தமிழகம் வந்து அதிமுக-பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்தில் 3 முறை பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மார்ச் 11ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சூரியூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற இடம் மற்றும் போக்குவரத்து வசதி சரியாக இருக்குமா? என்று பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Comments are closed.