நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத்
ரயில் சேவை தொடங்கப்பட்டு வரும்
நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக
சென்னை – கோவை இடையே வந்தே பாரத்
ரயில் சேவை தொடங்கியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
பிரதமர் மோடி
கலந்து கொண்டு இந்த ரயில் சேவையை
தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது
புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள்
இயங்கும். சென்னை – கோவை இடையே 3
ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில்
நிற்கும்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தேபாரத் ரயில்சேவை
ஞாயிற்றுக்கிழமைமுதல் முறைப்படி இயங்க இருக்கிறது.மேலும்
சென்னையில் இருந்து புறப்படும் இந்த
ரயில் 5 மணி நேரம் 50 நிமிடங்களில்
கோவை சென்றடையும். இடையே 3 ரயில்நிலையங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில்நிற்கும். சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர்ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.தினமும் காலை 6 மணிக்கு கோவையில்
இருந்து புறப்படும்.
கோவையில் இருந்து புறப்படும் வந்தே
பாரத், காலை 6.35 மணிக்கு திருப்பூர்
செல்லும். அங்கிருந்து 6.37 மணிக்கு
புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு.
அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு
காலை 7.58 மணிக்கு சேலம் ரயில்
நிலையத்தை அடையும். சேலத்தில் இருந்து
8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு
சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து
சேரும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு
புறப்படும். இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்
நிலையத்தை அடையும். இடையே, சேலம்
ரயில் நிலையத்தை மாலை 5.48 மணிக்கு
அடைந்து அங்கிருந்து 5.50 மணிக்கு
புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு
அடைந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும். 713
மணிக்கு திருப்பூர் செல்லும். அங்கிருந்து7.15
மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு
கோவை ரயில் நிலையத்தை அடையும்.
கட்டணம் எவ்வளவு? – முழு விவரம்
கோவை – சென்னை – (CC) ரூ. 1,215 / (EC) 2,310.
திருப்பூர் – சென்னை – (CC) ரூ. 1,130 / (EC) 2,145.
ஈரோடு – சென்னை – (CC) ரூ. 1,055 / (EC) 1,995.
சேலம் – சென்னை (CC) ரூ.970 / (EC) 1,805.*
அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ.,