திருச்சி ஸ்ரீரங்கம் சாலை ரோடு பாரத் கிரீன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவர் , ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அர்ச்சகராக இருந்தார்.
இவருக்கு மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், வங்கி தவணைத் தொகையை அவரால் முறையாக செலுத்த இயலவில்லை. இதனால், மன வருத்தத்தில் இருந்த சுந்தர்ராஜன், மனைவி கடைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அவரது மனைவி லலிதா கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தர்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1
of 917
Comments are closed.