ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று( செப்.2) தமிழகம் வருகை: நாளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம்…!
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று(02-09-2025) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வருகிறார். பின்னர் திருச்சியில்இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகையை முன்னிட்டு சென்னை, திருவாரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.