Rock Fort Times
Online News

நடிகர் அஜித்குமாருக்கு “பத்ம பூஷன் விருது”- ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவம்….!

நடிகர் அஜித்குமாருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார். மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தசூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(28-04-2025) நடைபெற்றன. விழாவில் கலந்துகொள்ள அஜித்குமார் நேற்று தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றிருந்தார். நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முா்மு நடிகர் அஜித் குமாருக்கு பூத்ம பத்மபூஷன் விருதினை வழங்கி கௌரவித்தார். இதைப் பார்த்து மகிழ்ச்சியிடந்த அஜித்குமார் ரசிகர்கள் அதற்கான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்