திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மார்ச் 2026 மேல்நிலை முதலாமாண்டு (Arear), இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 257 மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து 14,731 மாணவர்கள் மற்றும் 16,484 மாணவிகள் என மொத்தம் 31,215 பேர் 133 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களில் அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று 09.02.2026 முதல் 14.02.2026 வரை இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வினை 257 மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து முதல் சுற்றில் 11,533 மாணவர்களும் இரண்டாம் சுற்றில் 9,440 மாணவர்களும் ஆக மொத்தம் 20,973 மாணவர்கள் எழுதுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.