ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 610 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் டில்லி உட்பட வட இந்தியா முழுவதும் உணரப்பட்டது. இதனால், கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. மக்கள் வெளியே விரைந்து சென்றனர். ஜலாலாபாத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 20 நிமிடங்களுக்கு பிறகு, மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் இது பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், 610 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Comments are closed.