திருச்சி மாநகருக்குட்பட்ட கோட்டை மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும், பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் -20 ) செவ்வாய் கிழமை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி, கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கரூர் பைபாஸ் ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி பஜார், , வடக்கு ஆண்டார் வீதி, சிங்காரத்தோப்பு, கோட்டை ரயில்நிலைய சாலை, சாலை ரோடு, ஆகிய பகுதிகளிலும் அதேபோல, கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உறையூர் ஹவுஸிங் யூனிட், டாக்கர் ரோடு, பிவிஎஸ் கோயில், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, , சோழராஜபுரம், கம்பரசம் பேட்டை, காவேரிநகர், முருங்கைப் பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் தேவதானம், சஞ்சீவிநகர், சர்க்கார் பாளையம், , பனையகுறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 9 .45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Next Post
Comments are closed.