திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை (06-02-2025) மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழைய பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.