திருச்சி மாநகராட்சி சார்பில், தில்லைநகர் பகுதியில் நாளை(12-03-2025) பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, தில்லைநகர் முதலாவது குறுக்குத் தெரு, மேற்கு இரண்டாவது குறுக்குத் தெரு, மூன்றாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி சாலை விஸ்தரிப்பு, வடகிழக்கு விஸ்தரிப்பு, ஒன்றாவது குறுக்கு தெரு முதல் 5-வது குறுக்குத் தெரு வரை, தேவர் காலனி, சாலை ரோடு கிழக்கு, மலைக்கோட்டை காலனி, கரூர் புறவழிச்சாலை, அண்ணாமலை நகர் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் கா. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.