திருச்சி, வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக
நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை வாழவந்தான் கோட்டை, ஜெய் நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கிழக்கு குமரேசபுரம், மேற்கு குமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ் நகர், பெல் டவுன்சீப் ‘சி’ மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி.நகர், எழில் நகர், அய்யம்பட்டி, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என இயக்குதலும் காத்தலும், செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.