திருச்சி மாவட்டம், துறையூர் மின் கோட்டத்துக்குட்பட்ட கொல்லப்பட்டி, முத்தியம்பாளையம், நல்லவன்னிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் மற்றும் சி.டபிள்யூ.எஸ்.எஸ்.உயரழுத்த மின்னூட்டி ஆகியவற்றில் மின்கோபுர மின்பாதை நிறுவும் பணி நாளை (16-03-2025) மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாகமநாயக்கன்பட்டி, மதுராபுரி, எரகுடி, வடக்குபட்டி, திருமானூர், சேனப்பநல்லூர், வெங்கடேசபுரம், வீரமச்சான்பட்டி, சொக்கநாதபுரம், அய்யம்பாளையம், தேவரப்பம்பட்டி, கல்லுகுடி, கொத்தம்பட்டி, பெத்துபட்டி, கொல்லப்பட்டி, அம்மாபட்டி, சிங்களாந்தபுரம், நல்லவன்னிப்பட்டி, முத்தியம்பாளையம், காளியாம்பட்டி, பகளவாடி, மேலகுன்னுபட்டி, சித்திரப்பட்டி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, புளியம்பட்டி, கலிங்கமுடையான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.