திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை துணைமின் நிலையத்தில் நாளை ( 22.08.2023 ) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி,
நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், பிள்ளபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சு.கோம்பை, பாதர்பேட்டை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9-45 முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய முசிறி கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மருங்காபுரி அருகே மேட்டுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, காவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளயக்கோன்பட்டி, வி.இடையப்பட்டி குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரனிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்கலம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, போலம்பட்டி, துளுக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.