பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அளுந்தூர், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10-ம் தேதி மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அளுந்தூர் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளால் அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமா நகர், சூறாவளிபட்டி, குஜிலியம்பட்டி, யாகப்புடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, கலிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரக்குடிபட்டி, இ.மேட்டுப்பட்டி, மேலபச்சக்குடி, அரசுக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி, ஐஐஐடி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் ஜூன் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்மினியோகம் இருக்காது. இதேபோல, மணிகண்டம் துணை மின்நிலைய பராமரிப்பு பணியால் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மினசாரம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.