திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் நாளை ( 13.07.2023 ) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.ஹெச்.காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.