திருச்சி பெமினா ஹோட்டலில் நேற்று ( 30.04.2023 ) பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழில் முனைவோர் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளையின் ஆயுட்கால அறங்காவலரும், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லுனர் குழு உறுப்பினருமான தங்க பிரகாசம் தலைமை தாங்கினார். தலைவர் ஜெகதீஷ் குமார் தொடங்கி வைத்து பேசினார். அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜூ, செந்தில்குமார், காளீஸ்வரன் முன்னிலை வகித்தார்கள். அசோகன் வரவேற்றார்.இந்த விழாவில் ‘அம்பேத்கரை படித்தேன் ஐ.ஏ.எஸ். ஆனேன்’ என்ற தலைப்பில் ஆந்திர மாநிலம் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எஸ். சரவணன் ஐ.ஏ.எஸ். ‘நம்மாலும் முடியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் சென்னை ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் மோகன் கோபு, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் துணைத் தலைவர் ஜோதி கிருஷ்ணன், சேலம் மத்திய வருவாய் துறை துணை ஆணையர் கண்ணன், வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோரும் பேசினார்கள். அம்பேத்கர் பற்றிய பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.