Rock Fort Times
Online News

புதிய சாப்ட்வேர் பொருத்தும் பணியால் ஆகஸ்ட் 2-ம் தேதி தபால் நிலையங்கள் செயல்படாது…!

திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட திருச்சி தலைமை தபால் நிலையம், லால்குடி தலைமை தபால் நிலையம் மற்றும் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் புதிய தொழில்நுட்ப சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக தபால் நிலையங்களில் புதிய மென்பொருள் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆகஸ்ட் 2, 3-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இதையொட்டி திருச்சி தபால் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களும் ஆகஸ்ட் 2-ம் தேதி செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள் அதற்கேற்றார்போல தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் என்.பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்