Rock Fort Times
Online News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்கு பின்பு ” டிஸ்சார்ஜ்”… !

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (வயது 88), கடந்த பிப்ரவரி 14-ந்தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற்றார். வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது என்றும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறினார். அவருக்காக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தனர். இதன் காரணமாக அவர் கொஞ்சம், கொஞ்சமாக உடல் நலம் தேறி அவராகவே எழுந்து காபி சாப்பிடுவது, உணவை எடுத்து கொள்வது, பத்திரிகை வாசிப்பது உள்பட சில அன்றாட பணிகளை செய்து வந்தார். மேலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவருடைய நிலைமை சீராக உள்ளது என்று புரூனி கூறினார். இதனால், தொடர்ந்து 5 வாரங்களாக சிகிச்சையில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறியுள்ளார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் மருத்துவமனையின் பால்கனியில் இருந்து, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார். இந்தநிலையில் நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்