Rock Fort Times
Online News

தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்…!

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ், தற்போது அரசியல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்கும் வகையில் பேசிய அவர், அக்கட்சியின் பெண் தொண்டர்களை தகாத வார்த்தையால் இழிவுபடுத்தி பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பொன்ராஜின் இந்த பேச்சு, தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் விஜய், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்தார். இப்படிப்பட்ட சூழலில், தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்ட பொன்ராஜ், “காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்