ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு: ஜனவரி 8-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வருகிற பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதன்படி, 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், 8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். அன்று முதல் வருகிற 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தமிழகம் முழுவதும் நேற்று முதல் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.

Comments are closed.