Rock Fort Times
Online News

திருச்சியில் பி.எம்.சி. குளோபல் சாப்டரின் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

பி.எம்.சி.( பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் ) குளோபல் சாப்டரின் என்பது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்திலும், கேரளா, பெங்களூர் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அமைந்துள்ளன. 450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் இணைந்து பயணிக்கின்றனர். இந்நிலையில் பி.எம்.சி. குளோபல் சாப்டரின் சார்பில் பொங்கல் விழா திருச்சி, வயலூர் பகுதியில் அமைந்துள்ள வாசன் வேலியில் இன்று(12-01-2026) சிறப்பாக நடைபெற்றது . இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிஎம்சி சேர்மன் வி.அருள் மகேஷ் மற்றும் டைரக்டர் எம்.நாகராஜன், ரீஜினல் டைரக்டர் அகமது காமில் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். சுவையான அறுசுவை உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது விழாவை முன்னிட்டு குவிஸ் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிறைவாக துரைராஜ் மற்றும் ஆகாஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பி.எம்.சி. சாப்டர் பிரசிடெண்ட் வி.ஆர்.கே. ராம்குமார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்