மதுரை பட்டாலியன் காவல் துறையில் திருபுவனம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ராஜ பிரபாகரன்( வயது 26) என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக இவர் பணிக்கு செல்லாத நிலையில் காவலர் குடியிருப்பில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜ பிரபாகரனுக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது. அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.