Rock Fort Times
Online News

திருச்சியில் 88 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை…

தீபாவளி பண்டிகையை ஒட்டி குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடைவீதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி ஐபிஎஸ் உத்தரவின் பேரில், திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள சரித்திர பதிவேட்டு ரௌடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். 14 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டு ரௌடிகள் மொத்தம் 88 பேர் உள்ளனர். அதில் முக்கிய குற்றவாளிகளாக ஏ பிளஸ் வகையில் 26 பேரும், ஏ வகை குற்றவாளிகளாக 62 பேரும் உள்ளனர். இவர்களது வீடுகளில் மாநகர உதவி ஆணையர்கள் 6 பேர், ஆய்வாளர்கள் 13 பேர் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் இன்று ( 31.10.2023 ) காலை சோதனை மேற்கொண்டனா். அந்த ரவுடிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்