திருச்சி மாநகரில் உள்ள ஒரு சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி காந்தி மார்க்கெட் , பாலக்கரை பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தாராநல்லூர் சாலையில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக செல்லத்துரை மற்றும் ரத்தினம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அந்த கடையிலிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல திருச்சி பீமநகர் ஹீபர்ரோடு பகுதியில் ஒரு கடையில் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடையின் உரிமையாளர் நடராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகையிலை பொருட்களைப் பதுக்கி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.