என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முட்டை ரவி நினைவு தின போஸ்டரால் பரபரப்பு…
பாதுகாப்பு பணியில் போலீசார்....
திருச்சி மத்திய மண்டல மாவட்டங்களில் ஒரு சமுதாயம் சார்ந்த ரவுடியாக உலா வந்தவர் திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற முட்டை ரவி.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது, 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
அவற்றை இரவோடு இரவாக போலீசார் கிழித்தெறிந்தனர். மேலும், அவரது உடல் புதைக்கப்பட்ட, கொள்ளிடக்கரைக்கு அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்த வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதனையடுத்து அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று ( 21.10.2023 ) அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், கடைசிவரை அவரது ஆதரவாளர்கள் யாரும் அங்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. அதன் பின்னர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.