திருச்சி, சமயபுரத்தில் உள்ள 28 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை:* பெண் உட்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை…!
திருச்சி, சமயபுரத்தில் சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்குவதற்காக கோவிலை சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில விடுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களின் அடிப்படையில் சமயபுரத்தை சுற்றியுள்ள 28 லாட்ஜ்களில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன், லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா, சப்- இன்ஸ்பெக்டர் மேனகா, சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் மூன்று பிரிவாகப் பிரிந்து அதிரடி சோதனையில் \ ஈடுபட்டனர். லாட்ஜ்களில் சட்ட விரோதமாக யாரும் தங்கி உள்ளார்களா?, விபச்சாரம் ஏதும் நடக்கிறதா? என்று ஒவ்வொரு அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர். விடுதி மேலாளர்கள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கிட மான வகையில் தங்கி இருந்த இளம் பெண் உட்பட 5 பேரை போலீசார் பிடித்து சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.