திருச்சியில் உள்ள பெட்டிக் கடைகளில் போலீஸ் கமிஷனர் அதிரடி சோதனை…
5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்...
பள்ளி, கல்லூர வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. அதனை மீறி பள்ளி அருகே உள்ள ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை மறைமுகமாக நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி கீழப்புலிவார் ரோடு பகுதியில் செயல்படும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்பராக் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை ஆணையர் என். காமினி ஐபிஎஸ் , திருச்சி மாநகரம் முழுவதும் இந்த அதிரடி சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த அதிரடி சோதனையில் சுமார் 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.