திருச்சி, தேவதானம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தேவதானம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 24), தேவதானம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19), சின்னகடை வீதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பதும், அவர்கள் அப்பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரை மற்றும் ஊசிகள்,இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.