வெளியானது பாமக வேட்பாளர் பட்டியல் – 10-ல் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ரெடி! காஞ்சிபுரத்தில் யார் என்பது சஸ்பென்ஸ்.
2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதிகள் மாற்றம் என தேர்தல் திருவிழா களை கட்ட தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட பாமக திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது. பாஜக மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து தொகுதி உடன்பாடு இறுதியான நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டு பாஜக – பாமக இயே தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று ( மார்ச் -22 ) காலை வெளியிட்டுள்ளார். அதன்படி,
திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா,
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்,
கடலூர் – தங்கர் பச்சான்,
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – ந. அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.