சேலம் வாழப்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா கூட்டம் நடந்தது. கொடியேற்று நிகழ்ச்சிக்கு முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையில் ஏறி பேசத் தொடங்கினார் .அப்போது தொண்டர்களும் அதிக அளவில் மேடையில் ஏறினர் .சிறிய மேடை என்பதால் திடீரென மேடை சரியத் தொடங்கியது . இதனை சற்றும் எதிர்பாராத அன்புமணி முன்பக்கம் எகிறி குதித்தார். பெரிதாக அசாம்பவிதம் ஏற்படவில்லை. பின்னர் தொண்டர்களிடம் யாருக்காவது அடிபட்டு விட்டதா என்று நலம் விசாரித்தார். பின்னர் கொடியேற்றிவிட்டு கிளம்பினார் அன்புமணி. இந்த சம்பவம் வாழப்பாடியில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
