குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று(12-06-2025) மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. அகமதாபாத்தில் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 242 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமான விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா குஜராத் முதல்- மந்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
Comments are closed.