Rock Fort Times
Online News

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடா? பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்…!

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அதோடு உணவுகளின் எண்ணிக்கையையும் உணவகங்கள் குறைத்துள்ளன. இதற்கிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகள் காரணமாக பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும், போதிய அளவு கையிருப்பு உள்ளதாகவும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இந்த மாதம் இறுதி வரை தேவையான பெட்ரோல் கையிருப்பு இருப்பதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மாறாக, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பி பெட்ரோல் பங்குகளில் தேவையற்ற முறையில் வரிசையில் நின்று பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. மற்றொருபுறம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் இன்னும் 25 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்