முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். பேனா நினைவுச் சின்னம் திட்டத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று ( 10.07.2023 ) உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.