Rock Fort Times
Online News

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி ரத்து: தமிழக அரசு நடவடிக்கை…!

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்​து, உடனடி​யாக இந்த அனு​ம​தியை திரும்ப பெறு​மாறு மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. மத்​திய அரசின் புதிய எண்​ணெய் எடுப்பு கொள்கை அடிப்​படை​யில் தமிழகத்​தில் ராம​நாத​புரம், சிவகங்கை மாவட்​டங்​களில் 1,403 சதுர கி.மீ. பகு​தி​யில் ஹைட்​ரோ ​கார்​பன் எடுக்க எண்​ணெய், இயற்கை எரி​வாயு கழகம் (ஓஎன்​ஜிசி) அனு​மதி பெற்றது. இதில் முதல் கட்​ட​மாக ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் தனிச்​சி​யம், பேய்​குளம், வல்​லக்​குளம், அரியக்​குடி, காவனூர், சிறு​வயல், ஏ.மணக்​குடி உள்​ளிட்ட பகு​தி​களில் 20 ஹைட்ரோ கார்​பன் கிணறுகளை ரூ.675 கோடி செல​வில் தோண்ட திட்​ட​மிட்​டது. இந்த திட்​டத்​துக்கு அனு​மதி கோரி மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​திடம் ஓஎன்​ஜிசி கடந்த 2023 அக்​டோபரில் விண்​ணப்​பித்​தது. இந்த மனுவை ஆய்வு செய்த ஆணை​யம், 20 இடங்​களில் கிணறு அமைக்க ஓஎன்​ஜிசி நிறு​வனத்​துக்கு அனு​மதி வழங்​கியது. இதற்​கு, பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள், மீனவர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்த திட்​டத்​தால் கடல் வளம் அழி​யும். மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். எனவே, அனு​ம​தியை ரத்து செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தினர். இதை தொடர்ந்​து, நிதி, சுற்​றுச்​சூழல், கால​மாற்​றத் துறை அமைச்சர் தங்​கம் தென்​னரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில், தமிழக அரசு கடந்த 2020 பிப்​ர​வரி 20-ம் தேதி தமிழ்​நாடு பாது​காக்​கப்​பட்ட வேளாண் மண்டல சட்​டத்தை இயற்​றியதன் மூலம் காவிரி டெல்டா பகு​தியை பாது​காக்​கப்​பட்ட வேளாண் மண்​டல​மாக அறி​வித்​தது. அதன்​படி, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், புதுக்​கோட்டை மற்​றும் கடலூர் மாவட்​டத்​தின் குறிப்​பிடப்​பட்ட டெல்டா பகு​தி​களில் புதி​தாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்​கரி, மீத்​தேன், ஷேல் வாயு போன்​றவற்​றின் இருப்பு குறித்த ஆராய்ச்​சி, அகழ்​வுத் தொழில் மேற் கொள்ள தடை விதிக்​கப்​பட்​டது. 2023-ல் மயி​லாடு​துறை மாவட்​டத்​துக்​கும் தடை விரிவுபடுத்​தப்​பட்​டது. இந்த சூழலில், ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஹைட்ரோ கார் பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஓஎன்​ஜிசி விண்​ணப்​பித்​ததை தொடர்ந்​து, மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யம் நேரடி​யாக சுற்​றுச்​ சூழல் அனு​மதி வழங்​கி​யுள்ள செய்தி அரசின் கவனத்​துக்கு வந்​துள்​ளது. இதையடுத்​து, ஓஎன்​ஜிசி-க்கு வழங்​கப்​பட்ட அனு​ம​தியை உடனே திரும்ப பெறு​மாறு ஆணை​யத்​துக்கு தமிழக அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்