பெரம்பலூர் எம்.பி அருண் நேரு பிறந்தநாள்…- திருச்சியிலிருந்து டெல்லிக்கு படையெடுத்த திமுக பிரமுகர்கள்..!
தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான அருண் நேருவுக்கு இன்று (டிச.12 ) பிறந்தநாள்.தொழிலதிபராக இருந்த அருண் நேரு அரசியல் களத்தில் குதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்தநாளை திருச்சி திமுகவினரும், இவரது ஆதரவாளர்களும் பிரம்மாண்ட கேக், ஆளுயர மாலை, மேள தாளங்கள், போஸ்டர் – கட்-அவுட்கள் என ஆர்ப்பரிக்க கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் பிறந்தநாள் ஏகபோகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக திருச்சி தில்லைநகரிலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் களைகட்டும். ஆனால் இந்த வருடம் எம்.பி. அருண்நேரு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருக்கிறார். இதனால் திருச்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் திருச்சியிலிருந்து பிளைட் பிடித்து டில்லியில் முகாமிடத் தொடங்கிவிட்டனர்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச்செயலாளர் முத்துச்செல்வம்,திருச்சி மத்திய மாவட்ட திமுக பொருளாளர் துரைராஜ், கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், ராமதாஸ், முன்னாள் தில்லைநகர் பகுதி செயலாளர் கண்ணன், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசபெருமாள், லால்குடி நகராட்சி தலைவர் துரை.மாணிக்கம், லால்குடி ஒன்றிய செயலாளர்களான குழந்தைவேலு, நத்தம்.பெரியய்யா, தொழிலதிபர் லால்குடி முருகவேல்,அல்லூர் மு. கருணாநிதி, ஸ்ரீங்கம் ஜனா, சித்ரா ஹோட்டல் உரிமையாளர் பாரிவள்ளல், போன்ற பலரும் எம்.பி அருண் நேருவை டில்லியில் நேரில் சந்தித்து தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Comments are closed.