Rock Fort Times
Online News

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு….!

திருச்சி மாநகர் மாவட்டம் ஏர்போர்ட் பகுதி சார்பில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன்,
திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, நிர்வாகிகள் அய்யப்பன், வனிதா, பாலாஜி, வெல்லமண்டி பெருமாள், சகாபுதீன், செல்லப்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அமுதா பேசினார். கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக விலைவாசியை உயர்த்தி, சொத்து வரி மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கஷ்டத்தை கொடுத்து உள்ளார்கள். ஆகவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பேசினார். கூட்டத்தில் ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் அன்பழகன், புத்தூர் ராஜேந்திரன், ரோஜர், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், மாணவரணி ரஜினிகாந்த் , விநாயகமூர்த்தி, இளங்கோ, உலகநாதபுரம் சண்முகம், மதியழகன், கல்லுக்குழி முருகன், கலைப்பிரிவு ஜோசப் செபா , காந்திநகர் சரவணன், அமுதா, சதிஷ்குமார், ஹரிதாஸ், ராஜசேகரன், உடையான்பட்டி செல்வம், டைமன் தாமோதரன், கல்மந்தை விஜி, குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்