மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் திருச்சி சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செப்டம்பர் 18ம் தேதி ) மின்விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது., சிறுகனூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்நியோகம் பெறும் சிறுகனூர், ஆவாரவல்லி, திருப்பத்தூர், எம்.ஆர் பாளையம், சி.ஆர் பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவி மங்கலம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Comments are closed.