மெரினா அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள திமுக அரசு அதற்கான பணிகளை செய்து வருகிறது. பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் தேவை என்ற நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியது. பேனா நினைவு சின்னம் அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு ஒப்புதலும் அளித்திருந்தது. மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடலில் பேனா சின்னம் அமைப்பதால் கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.