புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா , 19 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா இன்று மாலை ( 20.10.2023 ) 5 மணி அளவில் புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் தெற்குவீதியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தேமுதிக துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பார்த்தசாரதி, தேர்தல் பிரிவு செயலாளர் தங்கமணி , மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் , தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் , துணை செயலாளர்கள் ஜெயராமன், பிரீத்தா விஜய் ஆனந்த் , காளியப்பன் , ராஜ்குமார் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், வழக்கறிஞர் ஐயப்பன் , லோகராஜ் , அன்வர்அலி ஆபிரகாம் , அகஸ்டின் உள்ளிட்ட பலர் பூச்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் காரில் புதுக்கோட்டை புறப்பட்டு சென்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.