திருச்சி மாநகரில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்தியபிரியா ஐபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள், மாவீரன் நெப்போலியன் போல் தைரியமாக இருக்க வேண்டும். வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கு மட்டுமே அடிமையாக வேண்டுமே தவிர போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமை ஆகக்கூடாது. கவலைகளுக்கு போதை ஒருபோதும் தீர்வாகாது. போதை இல்லா சமுதாயம் உருவாக இளைய சமுதாயத்தினரின் பங்கு அவசியம். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு 96262 73399 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ, அல்லது அவசர உதவி எண் 100 க்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் வெளியே வராது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்தும் நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவ- மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டுப் போட்டிகள் , நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் எம்.சத்தியபிரியா ஐபிஎஸ் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில்,
திருச்சி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனை அறுவை கிசிக்சை நிபுணர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் நோய்கள் குறித்து பேசினர். இதில், போலீஸ் துணை கமிஷனர்கள் செல்வகுமார் (தெற்கு), அன்பு (வடக்கு) மற்றும் உதவி கமிஷனர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.