Rock Fort Times
Online News

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எழும்பூர் காந்தி இர்வின் சாலைக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து தனித்தனி குழுக்களாக ஆசிரியர்கள் வந்தனர். அவர்களை அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த போலீசார் கைது செய்தனர். பல ஆசிரியர்கள் பஸ்சில் ஏற மறுத்து, சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றி மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்ட. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு எத்தனை நாட்கள், மாதங்கள் ஆனாலும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மக்களாட்சியில் போராட, கருத்து தெரிவிக்க அனுமதி இல்லை. அரசு ஊழியர்களை அலைகழிப்பது ஜனநாயக படுகொலை. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம்’ என்றனர். இதைபோல பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜன.14) பேச்சுவார்த்தை நடத்தினார். காலை 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15000 ஆக உயர்த்தப்படும்” என தெரிவித்தார். பகுதி நேர ஆசிர்களின் ஊதியம் ரூ. 12.500 ஆக இருந்தது. தற்போது ரூ.2,500 உயர்த்தி ரூ.15 ஆயிரமாக ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்