பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் : ஓ. பன்னீர்செல்வம் நாளை திருச்சி வருகை…
பிரமாண்ட வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு..
ஓ.பி.எஸ்.அணி அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்டக் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், புறநகர் மாவட்ட செயலாளர்கள் ரத்தினவேல், ராஜ்மோகன், சாமிக்கண்ணு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை (10-1-2024) புதன்கிழமை மதியம் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சுப்ரமணியபுரம் அருகில் உள்ள வி.எஸ்.திருமண மண்டபத்தில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர்கள் புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், இந்நாள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர, பேரூர் கழக, கிளை கழக, எம்.ஜி.ஆர்.மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி. மருத்துவ அணி, கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலைப்பிரிவு நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.